தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்.. ரயிலை கவிழ்க்க சதியா?

Mahendran

புதன், 11 செப்டம்பர் 2024 (10:26 IST)
தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், கற்கள் உள்பட பல்வேறு பொருட்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். 
 
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் என்ற பகுதியில் விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பதை கவனித்த ஓட்டுனர் அவசரமாக பிரேக்கை போட்டு ரயிலை நிறுத்தினார். ஆனால் ரயில் உடனடியாக நிற்காமல் அந்த சிலிண்டர் மீது மோதியது. இதில் தண்டவாளத்தை விட்டு அந்த சிலிண்டர் தூக்கி எறியப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் மட்டுமின்றி பெட்ரோல் நிரம்பிய பாட்டில், வெடி மருந்து ஆகியவை இருந்ததாகவும் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 ஏற்கனவே ராஜஸ்தானில் ரயில் ஒன்றை கவிழ்க்க கற்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நேற்று முன்தனம் நடந்த நிலையில் நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்