அதிமுகவை அசைக்க 1000 ஸ்டாலின் தேவையா என்ன? துரைமுருகன்!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (17:15 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காவிரி ஆணையம் அமைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இன்னும் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி ஆணையம் அமைக்கப்படவில்லை. 
 
அதற்குள் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா நடத்தந்தது. அதில், முதல்வர் பழனிசாமி அதிமுக அரசின் சட்ட போராட்டத்தால் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு அதிமுக அரசின் நடவடிக்கையால் வெற்றி கிடைத்துள்ளது என தெரிவித்தார். 
 
இந்நிலையில், காவிரி பிரச்சினையில் சாதித்தது திமுகவா அல்லது அதிமுகவா என்று ஒரே மேடையில் விவாதம் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா என துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
 
மேலும், ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சினையில் சாதித்து விட்டோம் என்று முதல்வர் பேசுகிறார் எனில், தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என நினைக்கத் தோன்றுகிறது.
 
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என கூறுகிறார். ஆனால், அதிமுக அரசை அசைத்து பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்