உத்தர பிரதேசம் கும்பமேளா நிகழ்ச்சியில் பலரும் நீராடி வரும் நிலையில் அந்த தண்ணீர் குளிக்க தகுதியற்றது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் பலக் கோடி மக்கள் அங்கு சென்று புனித நீராடி வருகின்றனர். பிரதமர், பல மாநில முதல்வர்கள், திரை நடிகர், நடிகையர், பிரபல தொழிலதிபர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் நீராடி வரும் நிலையில் அந்த தண்ணீர் அதிக மாசு கலந்ததாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆற்று நீரில் Faecel Coliform என்ற பாக்டீரியாவின் அளவு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மனித, விலங்குகளின் மலக்குடல் பகுதியில் உருவாகக் கூடிய இந்த பாக்டீரியாக்கள் அதிக அளவில் தண்ணீரில் உள்ளதால் அது குளிக்க தகுதியற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
பலரும் புனித நீராடி வரும் கும்பமேளா ஆற்று நீர் மாசுபாடு அடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K