போலந்து நாட்டை சேர்ந்த காப்ரியலா என்ற பெண், இந்திய நபரான ஹர்திக் வர்மாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு பதிவில், இந்தியாவின் பல பகுதிகளில் நாங்கள் இருவரும் ஜோடியாக பயணிக்கும் போதே, தன்னுடைய கணவரை பலர் டூர் வழிகாட்டி அல்லது டிரைவராகவே பார்ப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
"இந்தியாவில் புதிய இடம் ஒன்றுக்கு போனாலே, இது நடந்தே தீரும். ஹர்திக் என் டூர் கைடு, சில சமயம் டிரைவரா? என்றும் பலர் கேள்வி கேட்கின்றனர். நியாயமா இது? நாங்கள் கைகளைப் பிடித்து, நிமிஷத்திற்கு நூறு போட்டோக்கள் எடுக்கிறோம். இது ஒரு டிரைவருடன் நடக்குமா?" எனக் கேட்டார்.
அவரது பதிவு விரைவில் வைரலாக, பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஒருவர், "மீண்டும் திருமணம் செய்து ஒரு பேரணியை நடத்துங்கள்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மற்றொருவர், "உண்மையை ஏற்க மறுக்கும் மனிதர்கள், ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தாங்கள் எதிர்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்தனர்.