இவர் பாகிஸ்தானில் இருந்து வந்தவரா? கலெக்டரை பார்த்து கேள்வி எழுப்பிய பாஜக பிரபலம்..!

Mahendran

செவ்வாய், 27 மே 2025 (10:05 IST)
கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வகையில், பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற மேலவை உறுப்பினர் என். ரவிகுமார், கலபுரகி மாவட்ட ஆட்சியா் ஃபௌசியா தரான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஃபௌசியா தரானுமை “இவர் பாகிஸ்தானிலிருந்து வந்தவரா?” என கேள்வி எழுப்பியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
மே 21 அன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது அதை தடுக்க வந்த கலெக்டரை பார்த்து , “இவர் பாகிஸ்தானிலிருந்து வந்ததுபோல் தான் காணப்படுகிறது, அலுவலகத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது” என்று ரவிகுமார் தெரிவித்தார்.
 
இந்தக் கருத்துகள் ஐஏஎஸ் அதிகாரியின் தேசப்பற்றையும், அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்ததாக விமர்சனம் எழுந்தது. அமைச்சர் பிரியாங்க் கார்கே, இதைப் பற்றி “இது வெறுப்பின் வெளிப்பாடு; இந்த மாதிரியான பேச்சு சமூக விரோதமானது” என கண்டித்தார்.
 
மேலும் ரவிகுமாருக்கு எதிராக தேசிய ஒற்றுமைக்கு எதிரான பேச்சு, அதிகாரியைப் பயமுறுத்தல், மதவெறி உந்தும் செயல்கள், மற்றும் பழங்குடியினருக்கு எதிரான செயல்கள் குறித்த சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்