பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின்படி: மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் சிகிச்சைக்காக வந்த போக்குவரத்து ஊர்க்காவலரான ஷேக் பாபுலால் என்பவரின் உறவினரை இளம் மருத்துவர் பரிசோதித்துள்ளார். பரிசோதனைக்கு பிறகு, பாபுலால் மற்றும் அவருடன் வந்தவர்கள் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை, "தோளில் குத்தினர், கையை முறுக்கினர், வார்த்தைகளால் கடுமையாக திட்டினர், மேலும், நான் சாலையில் வெளியே சென்றால் கற்பழிப்பதாகவும் மிரட்டல் விடுத்தனர்" என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஊர்க்காவலர் ஷேக் பாபுலால் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.