இந்த வருமானத்தை பயன்படுத்தினால், ரூ.6 லட்சம் கோடி வரை கடன் பெற்று மாநிலத்தின் மருத்துவம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பொறுப்பேற்ற ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பி.கே.வின் இந்த அறிவிப்பு பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால், ஆளும் ஐக்கிய ஜனதா தளமோ மதுவிலக்கால் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டதால், ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.