கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜூஸ் லெர்னிங் ஆப் நீக்கம்.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 27 மே 2025 (09:18 IST)
பைஜூஸ் லெர்னிங் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். 
 
பைஜூஸ் கல்வி நிறுவத்தின் முக்கியமான "Byju's Learning App" கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் வெப் சர்வீசஸ்  என்ற விற்பனையாளருக்கு பணம் செலுத்தாததுதான் நீக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
 
பைஜூஸின் பிசினஸ் நடவடிக்கைகளை தற்போது ஒரு Insolvency Resolution Professional மேற்பார்வையிட்டு வருகிறார். அவர்தான் அனைத்து கட்டணங்களை நிர்வகிக்கிறார். "Think and Learn" பிராண்டின் கீழ் இயங்கும் மற்ற ஆப்புகள் இப்போது இயல்பாக செயல்பட்டு வருகின்றன.
 
பைஜூஸ் லெர்னிங் ஆப்பில் வகுப்புகள் 4 முதல் 12 வரையிலும் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் போன்ற பாடங்கள் உள்ளன. 6 முதல் 8ஆம் வகுப்புகள் வரை சமூக அறிவியல் பாடமும் உள்ளது. JEE, NEET, IAS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு பாடங்களும் இதில் உள்ளன.
 
இந்த ஆப் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இல்லை என்றாலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. பைஜூஸ் பிரீமியம் மற்றும் எக்ஸாம் பிரெப் ஆப்புகள் கூடுதலாக கூகுள் பிளே ஸ்டோரில் எப்போதும் போல் உள்ளது.
 
மேலும், பைஜூஸுக்கு எதிராக National Company Law Tribunal  பாங்கலூரு கிளை திவாலாக்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. BCCIக்கு ரூ.158.9 கோடி பணம் செலுத்தாததுதான் இதற்கு காரணம் எனவும் செய்தி வெளியானது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்