ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

Siva

புதன், 22 அக்டோபர் 2025 (13:14 IST)
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஸ்ரீகுரு திப்பருத்ரசுவாமி வேத பள்ளியில், மாணவர் ஒருவரை ஆசிரியர் வீரேஷ் ஹிரேமத் கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
 
பாட்டிக்கு பேச இன்னொருவரது மொபைல் போனை பயன்படுத்தியதற்காக மாணவரை அவர் தாக்கிய வீடியோ, எட்டு மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மாணவர் மன்றாடி கெஞ்சியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை. 
 
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழை) பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார்.
 
விடியோ வைரலானதைத் தொடர்ந்து, நாயக்கனஹட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான ஆசிரியர் வீரேஷ் ஹிரேமத்தைக் கலபுர்கியில் வைத்து கைது செய்தனர்.
 
இதுகுறித்து சித்ரதுர்கா எஸ்.பி. ரஞ்சித் குமார் பேசுகையில், "ஆசிரியர் வீரேஷ் நன்னா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலதிக விவரங்கள் விசாரணைக்கு பிறகு வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்