நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்: 20 ஆண்டுகள் தனி அறையில் சித்ரவதை!

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (15:44 IST)
கோவா மாநிலத்தில் 20 ஆண்டுகளாக தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்ட 45 வயது பெண் ஒருவரை போலீசார் மீட்டுள்ளனர்.
 
குறிப்பிட்ட அந்த பெண் தனது பட்டப்படிப்பை தொடர முயன்றபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தாய் மற்றும் சகோதரனால் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
20 ஆண்டுகளாக அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து அவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். 20 ஆண்டுகளாக போர்வையின்றி, படுக்கை இன்று சிமெண்ட் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.
 
அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். போலீசார் அந்த பெண்ணின் அறைக்குள் நுழையும் போது அவர் நிர்வாணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
போதிய உணவின்றி மிகவும் சோர்வுடன் நோய்க்கூறுடன் காணப்பட்ட அந்த பெண்ணை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்