பக்கோடா விற்று நூதன போராட்டம்: களத்தில் புதுச்சேரி முதல்வர்!

புதன், 7 பிப்ரவரி 2018 (21:37 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி, பக்கோடா விற்று நூதன் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவருடன் காங்கிரஸ் கட்சி ஆதவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டார். 
 
பிரதமர் மோடி சமீபத்தில் பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். 
 
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். 
 
மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 
 
இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றனர். மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெங்காய பக்கோடா விற்றார். இதேபோல் முதல்வர் நாராயணசாமி பஜ்ஜி மற்றும் போண்டா செய்து விற்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்