தீவிரவாதிகளுக்காக ரூ 85 கோடி நிதி திரட்டிய தொழிலதிபர்: 22 பேரின் வீடுகளில் சோதனை

சனி, 11 நவம்பர் 2023 (11:05 IST)
தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 22 பேர்களை வீடுகளில் புலனாய்வு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது. 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு ரூ.85 கோடி நிதி திரட்டியது தொடர்பான புகாரின் அடிப்படையில் மூத்த காவல்துறை அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 22 பேர்களை வீடுகளில் புலனாய்வு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். 
 
கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டதாகவும் பல்வேறு சட்ட விரோத பண பரிமாற்றங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகளின் எல்லை தாண்டிய தொடர்புகள் கடந்தல்காரர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வு போலீஸ் ஆக்டர் மீது உள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்