திருப்பூரில் தொழிலதிபர் வீட்டை உடைத்து கொள்ளை! – வடமாநில தொழிலாளர்கள் கைது!

வெள்ளி, 3 நவம்பர் 2023 (10:07 IST)
நிதி நிறுவன அதிபர் வீட்டின் கதவை உடைத்து பணம், நகையை கொள்ளை அடிக்க முயற்சி செய்த நான்கு ஒடிசாமாநில தொழிலாளர்கள் கைது.


 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் விநாயகா நகர் பகுதியில் வசித்துவரும் நிதி நிறுவன அதிபர் செல்வராஜ்,இவர் தனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளை வைத்துள்ளார்.

அதில் ஒரு வீட்டின் பகுதி முழுவதும் புட்கள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதற்காக ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த.கிருஷ்ணா(23,)உத்தாமேதர் (31)சோனியா நாயக்(20) குனாபெஹாரா(26) ஆகிய நான்கு பேரை அழைத்து வந்து நேற்று பகலில் வீட்டை சுத்தம் செய்யும் பணியினை கொடுத்துள்ளார்.

பணி முடிந்ததும் அவர்களை அங்கிருந்து மாலை அனுப்பி வைத்துவிட்டார். இந்த நிலையில் செல்வராஜ் தனது மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மறுநாள் காலை இன்று எழுந்ததும் கதவை திறந்தபோது கதவு திறக்கப்படவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தனது நண்பருக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்து பார்த்த போது செல்வராஜ் தூங்கிக் கொண்டிருந்த வீட்டின் கதவு முன் பக்கத்தில் தார்பாழ் போடப்பட்டிருந்தது.

அதன் பிறகு நண்பர் தார்பாழை திறந்து விட்டு வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தனர்.ஆனால் சந்தேகப்படும் படியான எந்த ஒரு சம்பவமும் தெரியவில்லை அதன் பிறகு அருகில் இருந்த மற்றொரு தனது வீட்டைச் சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் அவர் வைத்திருந்த ஆவணங்கள் கலைந்த நிலையில் கிடந்தது இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் மூலனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது உங்கள் வீட்டிற்கு நேற்று வந்தார்களா என செல்வராஜ் இடம் விசாரித்தார் அப்போது ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கூலி தொழிலாளர்கள் நேற்று வீட்டை சுத்தம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர் விசாரணையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் செல்வராஜ் துவங்கிய பிறகு அவரது ஒரு வீட்டிற்கு தாற்பாழ் இட்டு மற்றொரு வீட்டில் வைத்திருந்த நகை பணம் கொள்ளை அடிக்க சென்றதாகவும் ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பணம் நகை எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாகவும் ஒப்புக்கொண்டனர் அதன் பிறகு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர்கள் மீது மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரிசா மாநில தொழிலாளர்கள் பகலில் கூலி தொழிலாளர்கள் ஆகவும் இரவில் கொள்ளைக்காரர் ஆகவும் இருந்து வந்தது மூலனூர் பகுதி மக்களிடத்தில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்