உலகளவில் பிரபலமாகியுள்ள ‘போக்கிமான் கோ’ என்ற மொபைல் வீடியோ கேம், அதிக அளவில் விபத்துகள் ஏற்பட காரணமாகி வருகிறது.
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ‘போக்கிமான் கோ’ என்ற ரியாலிட்டி கேம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல சாலை விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த மொபைல் கேம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மற்ற நாடுகளை போல தனது முதல் விபத்தை பதிவு செய்துள்ளது. மும்பையை சேர்ந்த ஜாபிர் அலி(26) என்பவர் சிலநாட்களுக்கு முன் தனது மெர்சிடஸ்பென்ஸ் காரை ஓட்டியபடி போக்கிமோன் கோ விளையாடியதால் விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்து கற்றுக் கொடுத்த பாடத்தால், ஜாபிர் அலி தற்போது போக்கிமான் கோ விளையாட்டின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதை விளையாடும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேதமடைந்த தனது காரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்