பிரதமர் பதவியை மோடி செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கெடு

Mahendran

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (12:37 IST)
பிரதமர் பதவியை மோடி 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் வேறு வழியில் அவர் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சுப்பிரமணியம் சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவை பொருத்தவரை 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கட்சி பதவியில் அல்லது முக்கிய பதவி அளவில் இருக்க கூடாது என்ற விதி உள்ளது. ஆனால் இந்த விதி பிரதமர் மோடிக்கு பொருந்தாது என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சுப்பிரமணிய சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தனது 75வது பிறந்த நாளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால் வேறு வழிகளில் அவர் தனது பிரதமர் நாற்காலியை இழக்கக்கூடும் என்று பதிவு செய்துள்ளார்.

அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 75 வயதில்  ஓய்வு பெற வேண்டும் என்ற பாஜக விதியின் படி மோடி ராஜினாமா செய்வார் என்றும் அதன் பிறகு பிரதமர் நாற்காலியில் அமித்ஷா உட்காருவார் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்