வர்த்தகம் என்பது வணிக அடிப்படையில் நடைபெறுகிறது என்பதை வலியுறுத்திய அவர், "இந்திய நிறுவனங்கள் சிறந்த விலை கிடைக்கும் எந்த இடத்திலிருந்தும் வாங்கும். எங்களின் நோக்கம், 1.4 பில்லியன் இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது. ரஷ்யாவுடன் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளுடனும் இந்தியாவின் ஒத்துழைப்பு, உலக எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர உதவியுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.