காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும்: சண்முகம்

Mahendran

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (12:15 IST)
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்து உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்து, காதலர்கள் திருமணம் செய்வதர்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கும் என சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
 
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது.
 
அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்
 
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதல்வர் கொண்டு வர வேண்டும்.
 
இவ்வாறு பெ. சண்முகம் கூறி உள்ளார்.
 
 
Edited by Mahendran 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்