GATE நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு திடீர் ஒத்திவைப்பு..! என்ன காரணம்?

Mahendran

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (11:49 IST)
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான GATE நுழைவு தேர்வு விண்ணப்பப்பதிவு, இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு GATE தேர்வை குவாஹாத்தி ஐஐடி நடத்துகிறது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், இந்த தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
முக்கியத் தேதிகள் மற்றும் தேர்வு அட்டவணை
 
மாற்றப்பட்ட தேதிகளின்படி, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அட்டவணை பின்வருமாறு:
 
விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஆகஸ்ட் 28, 2025.
 
அபராதம் இன்றி விண்ணப்பிக்க இறுதி நாள்: செப்டம்பர் 28, 2025.
 
அபராதத்துடன் விண்ணப்பிக்க இறுதி நாள்: அக்டோபர் 9, 2025.
 
நுழைவுச் சீட்டு வெளியீடு: ஜனவரி 2026.
 
தேர்வு நடைபெறும் நாட்கள்: 2026  பிப்ரவரி 7, 8, 14, 15, 
 
இத்தேர்வு கணினி வழியாக 30 பாடப்பிரிவுகளுக்கு 100 மதிப்பெண்களுக்கு, 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ஆம் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வு மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்