போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில் நேற்று அவர் போலந்து சென்றார். அங்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசிய போது இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும் என்றும் எந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் முதலில் உதவி செய்யும் நாடு இந்தியா தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த நேரத்தில் போர் தேவையில்லாத ஒன்று என்றும், நாம் சவால்களை எதிர்கொள்ள ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக திகழும் இந்தியா நிரந்தர அமைதி நிலவுவதையே விரும்புகிறது என்றும் பேசி உள்ளார்.
மேலும் உலக நலனுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் ஓடி இந்தியா அனைத்து நாடுகளின் நல்வாழ்வை பற்றி சிந்திக்கிறது மற்றும் நெருக்கடி காலங்களில் உதவி செய்கிறது, குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய்களின் போது இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்தது என்றும் தெரிவித்தார்.