தீவிபத்து நடந்தது எங்கே? பிரதமர் மோடி டுவிட்டரில் விளக்கம்

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:58 IST)
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி அலுவலகத்தில் இன்று இரவு திடீரென சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததாகவும் சற்று முன் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சிறிய அளவில்தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த தீ விபத்து சில நிமிடங்களில் கட்டுப்படுத்தபட்டதாகவும் தீயணைப்பு துறையினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரதமர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் இந்த தீ விபத்து குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார். இன்று இரவு லோக் கல்யாண் மார்க் என்ற பிரதமர் இல்ல, அலுவலக வளாகத்தில் எலக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் காரணமாக சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் இந்த தீ விபத்து பிரதமர் இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் நடக்கவில்லை என்பதும்,  எஸ்பிஜி ரிசப்ஷன் ஏரியாவில் தான் இந்த தீ விபத்து நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் தீ விபத்து உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் இதனை அடுத்து பாஜக தொண்டர்களும் நாட்டு மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்