பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை திடீர் ரத்து: என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:58 IST)
பிரதமர் மோடி திருப்பூரில் ஜனவரி 19-ம் தேதி நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.

திருப்பூரில் ஜனவரி 19-ம் தேதி பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக அறிவித்து இருந்தது.

ALSO READ: கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்பு.. பாரத் மாதா கீ ஜே’ என கோஷம்..!

இந்த பொதுக்கூட்டத்திற்கு திருப்பூரில்  6 இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், திடீரென சில நிர்வாக காரணங்களால் பிரதமர் மோடி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பிரதமர் பங்கேற்க உள்ள திருப்பூர் பொதுக்கூட்டத்தின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்