பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்புகிறது: பிரதமர் மோடி உரை

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:11 IST)
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்
 
* கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது. தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது 
 
* ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88% ஆக அதிகரிப்பு
 
* பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலும் போய்விடவில்லை. லாக்டவுனை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது
 
* கொரோனா ஒழிந்து விட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது; ஊரடங்கு முடியலாம் ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும்
 
* திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. * பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்
 
இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்