இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியபோது இந்தியாவில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது எனக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன என்றும் எனக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும் ஆனால் ஒரு வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதிலிருந்து தற்போது வலுவான எதிர்க்கட்சி இந்தியாவில் இல்லை என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.