இந்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை என்று கூறினார்.
மேலும், ''பாரத மாதா என்று நான் பேசிய வார்த்தைகள் நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நடந்து வருவதை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில் நிறுத்த முடியும். பிரமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.