சென்னையில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனை போனில் அழைத்து, அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
.
இதுகுறித்து, விக்னேஷ் சிவன், போனில் அழைத்து எனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி சார். நிகழ்ச்சி முடிந்த பின்,எனக்கு உடனே அழைத்துப் பேசியதற்கு மகிழ்கிறேன். உங்கள் குரல் கேட்டதிலும் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அழகான தருணம் எனத் தெரிவித்துள்ளார்.