இன்று மன் கீ பாத் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் பேசி வரும் பிரதமர் மோடி குழந்தைகள் பொம்மைகள் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.
மாதம்தோறும் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் என்னும் மனதின் குரல் வானொலிகளில் ஒலிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தார்.
பிறகு பேசிய அவர் “புதிய கல்வி கொள்கையில் குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தியாவில் தயாராகும் பொம்மைகள் உலக அளவில் பிரசித்தி பெற வேண்டும். அதேபோல நமது குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லி தர வேண்டும். நமது பாரம்பரிய விளையாட்டுகளை வீடியோ கேம்களாக மாற்ற வேண்டும். அதன்மூலம் குழந்தைகளிடம் நமது பாரம்பரிய விளையாட்டுகளை கொண்டு சேர்க்கலாம்” என கூறியுள்ளார்.
மேலும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.