எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:30 IST)
எம்பி வசந்த குமார் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் எம்பியும், தொழிலதிபரும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் சற்று முன்னர் கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கியது. அவரது மறைவிற்கு தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். வசந்தகுமார் அவர்களின் மறைவு வருத்தம் அளிப்பதாகவும் வர்த்தகம் மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்கு கவனிக்கத் தக்கது என்று கூறியுள்ளார் 
 
தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து என்னிடம் அடிக்கடி பேசுவார் வசந்தகுமார் என்றும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் நடிகை குஷ்பு உள்பட பல காங்கிரஸ் நிர்வாகிகளும் வசந்தகுமார் குடும்பத்தினர்களுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்