140 கோடி மக்களின் நம்பிக்கைதான் எனது கவசம்! – ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி?

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (09:14 IST)
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசிய நிலையில் அதற்கு பதில் தரும் வகையில் மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சமீபத்தில் அதானி பங்குசந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டென்பெர்க் அறிக்கை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்பு படுத்தி நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பாஜக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ராகுல்காந்தியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பேசினார். அதில் அவர் “என் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது வெறும் செய்தித்தாள் தலைப்புகள், தொலைக்காட்சி செய்திகள் மூலமாக வந்தது இல்லை. மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக நான் அர்ப்பணிப்புடன் இருப்பதன் வாயிலாக வந்தது. நான் 140 கோடி மக்களின் நம்பிக்கை என்ற கவசத்தை அணிந்துள்ளேன். அதை எதிர்கட்சிகளின் பொய்களால் உடைக்க முடியாது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்