3வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

Mahendran

திங்கள், 10 ஜூன் 2024 (12:10 IST)
3வது முறையாக பிரதமரான மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் முதல் கையெழுத்திட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடு முழுவதிலும் உள்ள 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20,000 கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாயிகளுக்கு 17வது தவணையை விடுவிக்கும் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார் என்ற செய்தி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
முன்னதாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆட்சி அமைத்தது என்பதும் பிரதமராக நேற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்று கொண்ட பின்னர் அவரை தொடர்ந்து 72 அமைச்சர்கள் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமர் ஆன மோடியின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்