பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்த போது இலங்கைக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ஜெயராம் ரமேஷ் நேற்றைய பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் கலந்து கொண்டுள்ளதை நினைவுப்படுத்தி பாருங்கள். கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் எந்த அளவுக்கு திரித்து பொய்யாக பேசியுள்ளார் என்று நினைத்து பாருங்கள்.
பொறுப்பற்ற முறையில் இந்தியா இலங்கை இடையிலான உறவை சீர்குலைக்கும் விதத்தில் அவர் பேசியுள்ளார். அதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள். மோடியும் அவரது கட்சியினரும் அண்டை நாட்டின் கொள்கையை மீறி இப்படி ஒரு சர்ச்சை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்பார்களா என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.