7 வாக்குச்சாவடிகளில் மீண்டும் மறுவாக்குப்பதிவு! – தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு!
ஞாயிறு, 20 பிப்ரவரி 2022 (15:55 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பொதுமக்கள், அரசியல், சினிமா பிரமுகர்கள் உள்பட பலரும் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். தமிழகம் முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த சில பகுதிகளில் முறைகேடு நடந்ததாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது வாக்கு இயந்திர கோளாறு மற்றும் சில காரணங்களால் 7 வாக்குச்சாவடிகளில் நாளை மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் நாளை 7 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.