ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதா? நீட்டிப்பதா? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (08:37 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், தற்போது அமலில் இருக்கும் ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்று பிரதமர் மோடி அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார் 
 
அடுத்தகட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும், இந்த ஆலோசனையின் போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து கருத்துக்களை கேட்க உள்ளதாகவும், குறிப்பாக திரையரங்குகள் உடற்பயிற்சி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
எனவே மாநில முதல்வர்களுடன் ஆலோசனை முடிவடைந்ததும் இன்று மாலை பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு கடந்த நான்கு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏழை எளிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பதும், பொருளாதார ரீதியில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் ஊரடங்கு உத்தரவை முழுமையாக தளர்த்தி அதே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்