சி.பி.எஸ்.இ மறுதேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (22:14 IST)
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் சமூகவலைத்தில் வெளியானதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் 25ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மறுதேர்வை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 16.38 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பில் 11.86 லட்சம் மாணவர்களும் எழுதினார்கள். ஆனால், கேள்வித்தாள் வெளியானதாக வந்த புகாரையடுத்து, முழுமையாக விசாரணை செய்து முடிக்காமல் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும்.

தேர்வு தொடங்குவதற்கு சிலமணிநேரத்துக்கு முன் கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. ஆனால், கேள்வித்தாள் வெளியாகவில்லை, பெற்றோர்களும், மாணவர்களும் அச்சப்பட வேண்டாம் என்று சிபிஎஸ்இ அப்போது அறிவித்தது. ஆனால், இப்போது மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ நடத்தும் மறுதேர்வு அறிவிப்பை ரத்து செய்வதோடு, ஏற்கெனவே நடந்த தேர்வுகளின்படியே முடிவுகளை அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்