மக்களவை பட்ஜெட் தொடரில் வருடத்திற்கு 5 லட்சத்திற்கு கீழ் வருமானம் பெறுபம் நபர்களுக்கு வரி கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 5 வருடங்களில் வரி விதிப்பு தொடர்பாக பல மாற்றங்களை கொண்டுவந்தது அப்போதைய பாஜக அரசு. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக அமைச்சரவையில் நிர்ம்லா சீதாராமன் நிதியமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது, மக்களவை பட்ஜெட் தொடரில் ரூ.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் பெறும் நபர்களுக்கு வரி கிடையாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும் வருடத்திற்கு ரூ.5 கோடி மேல் வருமானம் பெறும் நபர்களுக்கு தற்போதைய வரியிலிருந்து 75 கூடுதலாக வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
எலக்டிரிக் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி 12 % கீழ் கொண்டு வரப்படும் என்றும், மேலும் ரூ.400 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் வருமான வரித்தாக்கலுக்கு பான்கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் எனவும், குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் 1.5 லட்சம் வரிச்சலுகை தரப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்படுள்ளது.