முத்ரா திட்டம் மூலம் பத்து லட்ச ரூபாய் கடனுதவி – பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:37 IST)
தற்போது நடந்து வரும் மக்களவை பட்ஜெட் கூட்ட தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.
அதில் பெண்களுக்கான பல திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
சுய உதவிக்குழுக்களில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
முத்ரா திட்டத்தின் மூலம் தொழில் முன்னேற்றத்திற்கு 10 லட்ச ரூபாய் வரை வங்கிகளில் கடன் பெற முடியும்.
சுய உதவிக்குழுக்களில் கடன் பெறும் பெண்களுக்கு அவர்கள் கட்டும் வட்டி பணத்தில் மானியம் அளிக்கப்படும். இதன் மூலம் பெண்கள் சுயதொழில் மற்றும் வருமானம் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.