75,000 இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி: பட்ஜெட் தாக்கலில் அறிவிப்பு

வெள்ளி, 5 ஜூலை 2019 (12:28 IST)
மக்களவை பட்ஜெட் தொடரில், இந்தியர்களுக்கு சர்வதேச அளவில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தில் மும்முரமாக செயலாற்றியது கடந்த பாஜக அரசு. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜக அமைச்சரவையில் நிர்ம்லா சீதாராமன் நிதியமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மக்களவை பட்ஜெட் தாக்கலில், சர்வதேச அளவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெரும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 75,000 இளைஞர்களை தேர்ந்தெடுத்து தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்