ஜிஎஸ்டி வரியால பொருட்களின் விலை குறைந்துள்ளது என பொதுமக்கள் பாராட்டி தொடர்ச்சியாக கடிதங்களை அனுப்பி வருகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கி பாத் என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். இன்று அவர் வெள்ளம் மற்றும் ஜிஎஸ்டி குறித்து உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:-
இம்முறை பருவ மழை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம்.
நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து ஒருமாதம் ஆகிறது. ஜிஎஸ்டி தொடர்பாக அதிகமான பதில்கள் பெறப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டியை பாராட்டி தொடர்ச்சியாக பொதுமக்கள் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். அன்றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை குறைந்துள்ளது என்பது தொடர்பாக ஏழை ஒருவர் எழுதிய கடிதத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.