ஆம்புலன்ஸுக்கு வழிவிடாவிட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?

Sinoj

செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (13:37 IST)
ஹரியானா மாநிலத்தில்  ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்கு ஆம்புலன்ஸுக்கு கட்டாயம் வழிவிட வேண்டும் எனவும், அப்படி வழிவிடாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹரியானா மாநிலம் குருகிராமில், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
 
போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டு, கேமராக்களின் வாயிலாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விதியை  மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்