உத்தராகண்டில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம்.. இந்தியாவில் முதல்முறை..!

Siva

வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (09:01 IST)
இந்தியாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அவசர மருத்துவ சேவைக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிஷிகேஷ் பகுதியில் இருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இந்த ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் மலைப்பகுதியில் உள்ள நோயாளிகளை சாலை வழியில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்வது சவால் ஆனதாக இருப்பதால் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து விரைவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவை ஆரம்பமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்