மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவை - நடிகர் பாலாவுக்கு குவியும் பாராட்டுகள்

Sinoj

வெள்ளி, 12 ஜனவரி 2024 (20:43 IST)
மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று பாலா தொடங்கி வைத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.

இவர் சின்னத்திரையில் நடிப்பதுடன், தற்போது சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார்.

இந்த நிலையில்,  கடந்தாண்டு,  ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி உள்ளிட்ட 18 கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி,  கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சத்தியமங்கலத்திற்கும்  சென்றனர்.

இதனால் அவசர உதவி காலத்தில் மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம், நகைச்சுவை நடிகர் பாலா ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ்ஸை தன் சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்தார்.

இதையடுத்து , சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ1000 வீதம் கொடுத்து  உதவினார். சமீபத்தில் செங்கல்பபட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் கிராமத்தில் ரூ. 3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்தார்.

இந்த நிலையில், சென்னை அனகாபுத்தூர் பகுதியில்,  இன்று,  நடிகர் பாலா மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மருத்துவத்திற்கு  செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருப்பதாலு அனைவராலும் ஆட்டோவில் செல்ல முடியவில்லை என்பதாலு பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ஆட்டோ சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த இலவச ஆட்டோ கால 9 முதல் இரவு 10 மணி வரை அனகாபுத்தூர், பல்லாவரம், போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் மருத்துவத்திற்காக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆட்டோ ஓட்டுனரின் சம்பளம் என் சொந்த செலவில் வழங்கப்படும்  என்று  நடிகர் பாலா கூறியுள்ளார்.

 நடிகர் பாலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்