போதை பொருள் என்று ரஸ்னா பவுடரை விற்ற கும்பல் – மேகாலயா போலிஸ் ட்வீட்

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (13:22 IST)
போலீஸாரின் கடுமையான சோதனைகளால் போதை பொருட்கள் விற்க முடியாததால் ரஸ்னா பவுடரை வைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர் கடத்தல் கும்பல்.

இந்தியாவின் பல மாநிலங்களில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேகாலயா காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அங்கே போதைப்பொருள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் போதைப்பொருள் கேட்டு வருவோரை ஏமாற்றி பணம் பார்க்க தொடங்கியுள்ளனர் கடத்தல்காரர்கள்.

போதைப்பொருள் வாங்க வருவோருக்கு பாக்கெட்டுகளில் ரஸ்னா பவுடரை கொட்டி கொடுத்து ஏமாற்றி வருகிறார்களாம். போதை பொருள் தொழிலில் இல்லாத சிலரும் இந்த வகை நூதன மோசடிகளை செய்து வருகிறார்களாம்.

இதுபற்றி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள மேகாலயா காவல்துறை “மோசடி எச்சரிக்கை! ஷிலாங் போதைப்பொருள் மார்க்கெட் சரிந்துவிட்டதால் கஸ்டமர்களுக்கு ரஸ்னா பவுடரை கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

உங்களுக்கு யாராவது ரஸ்னா பவுடரை கொடுத்து ஏமாற்றினால் தாராளமாக புகார் செய்யலாம்” என்று காமெடியாக கூறி உள்ளனர்.

இது மேகாலயாவில் போதைப்பொருட்கள் புழக்கம் எந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் என சிலர் கூறுகிறார்கள். அந்த ட்வீட்டில் ரஸ்னா நிறுவனத்தையும் டேக் செய்துள்ளனர்.

SCAM ALERT!

*clears throat*

Shillong market is so dry that peddlers are fooling their clients with Rasna(!?) Powder.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்