70% சரிந்த பேடிஎம் பங்கு: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (19:42 IST)
பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் திடீரென 70 சதவீதம் சரிந்துள்ளது பங்குதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2150 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என ரிசர்வ் வங்கி சமீபத்தில் உத்தரவிட்டதை அடுத்து இந்த நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது 
 
இதனால் பங்கு வர்த்தகத்தில் இதன் பங்குகள் படிப்படியாக குறைந்து நேற்று 597 ரூபாய்க்கு முடிவடைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு 70% சரிந்துள்ளதால் இந்த பங்கை வாங்கியவர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்