சிகிச்சை அளிக்க தாமதம் செய்த மருத்துவருக்கு அடி உதை (வீடியோ)

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (15:20 IST)
சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்ததாக கூறி மருத்துவரை, நோயாளின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் மருத்துவமனை ஒன்றில், நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் தாமதப்படுத்தியதாக கூறி நோயாளியின் உறவினர்கள் முதலில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். 
 
பின் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியது. இந்த சண்டையில் நோயாளியின் உறவினர்கள் மருத்துவரை கடுமையாக தாக்கினர். இதில் மருத்துவர் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 
மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து மருத்துவரை தாக்கிய சம்பவம் மருத்துவமனை சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Desi Medicos
அடுத்த கட்டுரையில்