இன்று கங்கண சூரிய கிரகணம்; ஆனால் பார்க்க முடியாது..?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (09:58 IST)
இந்த ஆண்டிற்கான வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

வானியல் அபூர்வ நிகழ்வான சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டில் நடைபெறும் ஒரே கங்கண சூரிய கிரகணம் இதுவாகும். ஆனால் புவியியல் சுழற்சியின் அடிப்படையில் இந்த கங்கண சூரிய கிரகணத்தை இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்த ஏனைய பகுதிகளில் காண இயலாது.

காலை 11.42 மணி அளவில் தொடங்கும் கங்கண சூரிய கிரகணம் பிற்பகல் 3.30 மணி அளவில் முழுமை பெற்று பின்னர் 4.52 மணி அளவில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம். லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரியன் மறையும் முன்னரே இந்த நிகழ்வை காண இயலும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்