இயற்கைப் பூக்களைப் போன்றே காகிதப் பூக்களை தயாரிக்கும் இந்தியர் ...

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (21:15 IST)
ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த சவுரவ் குப்தா என்பவர் இயற்கையான பூக்களைப் போன்றே காகிதப் பூக்களை தயாரித்து வருகிறார். இத்துறையில் தனித்தன்மையுடன் விளங்கும் அவர் தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் நிலையில் அங்கு வெகுபிரபலம் ஆகியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சவுரப் குப்தா , இந்தியாவில் கட்டிடக்கலை படித்துமுடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள பார்சனல் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்வி உதவித் தொகை மூலம் பயிற்சியில் சேர்ந்தார். 
 
அங்கு அவரது ஆசிரியரின் சொன்னதான் பேரில் ஆடைகளுக்கு  ஆடைகளுக்கு பூ தயாரிக்கும் ஒரு கலைஞரிடம் பயிற்சி பெற்றார். தன் பள்ளிப் பருவத்திலிருந்தே பல கலைப்படைப்புகளை உருவாக்கும் வேலையை செய்து வந்ததால் இந்தப் பயிற்சி அவரை அமெரிக்காவில் மிகப் பிரபலமாகியது. இந்நிலையில் அங்கு திறமையான மற்றும் தனித்தன்மையான கலைஞராக ஆகியுள்ளார்.இந்நிலையில் தனது அற்புதமான மெய்நிகர் படைப்புகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனால் அவருக்கு ரசிகர்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளனர். வாடிக்கையாளரும் ஆகியுள்ளனர். அதன்மூலம பல ஆர்டர்கள் குவிந்துவருகிறது. அத்துடன் அவருக்கு வருமானம் அதிகரித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்