2018 – 2019 ம் நிதி ஆண்டின் அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் பணப்பரிவர்த்தனைகள், கள்ள நோட்டு புழக்கம், வங்கி மோசடிகள் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டைவிட வங்கி மோசடிகள் 74 சதவீதம் இந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
முந்தைய நிதியாண்டை விட இந்த ஆண்டு வங்கிகளில் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றை கண்டுபிடித்து சரிசெய்ய வங்கிகள் பல மாத காலங்கள் எடுத்து கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல மோசடி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான 100 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடரும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.