கடந்த திங்கட்கிழமை காஷ்மீரின் பாம்போர் பகுதியில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் நுழைந்தனர்.
அவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதை அடுத்து அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தனர்.
இதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளையும் இன்று ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதை அடுத்து, பாம்போர் தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.