இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

Siva

ஞாயிறு, 4 மே 2025 (10:28 IST)
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.
 
இந்த சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனையடுத்து, ராஜஸ்தானில் இந்திய எல்லையை கடந்து வந்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் விசாரணை செய்ததில் சில திடுக் தகவல்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவத்திற்கு முன்பாக ஏப்ரல் 23-ஆம் தேதி பஞ்சாப் பகுதியில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக அங்குள்ள ராணுவத்தினர் அவரை கைது செய்தனர். ஆனால், இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவரை பாகிஸ்தான் ராணுவம் தற்போது வரை விடுவிக்க மறுக்கிறது என்பது கவலைக்கிடமான விடயமாக இருக்கிறது.
 
இந்த நிகழ்வுகள் இரு நாடுகளுக்கிடையேயான நிலைமையை மேலும் கடுமையாக்கும் என்றே தெரிகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகும் சூழலில், எல்லைப்பகுதியில் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்