அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் புகழ்பெற்ற உணவுத் தெரு ஒன்று உள்ளது. அந்த தெருவின் நுழைவாயிலில், பாகிஸ்தான் ராணுவ தலைவரின் புகைப்படத்தை பன்றியாக மாற்றி, “பன்றிகளும் பாகிஸ்தானியர்களும் இந்த தெருவில் வரக்கூடாது” என எழுதப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் மீதான இந்தியர்களின் கோபத்தை இந்த போர்டு வெளிப்படுத்துவதாகவும், “இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்” என்றும் அந்த தெருவில் உணவகங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், “ஒரு பயங்கரவாதியை கொன்றால் ஒரு கோடி தரப்படும், 100 பயங்கரவாதிகளை கொன்றால் 100 கோடி தருவேன்” என்றும் கூறியிருப்பது அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.