பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், இந்தியா எந்தவொரு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் முழு கவனத்துடன் காத்திருக்கின்றன. இதனை அடுத்து, இந்திய பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவத் தலைவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் ஆசீம் முனீர் தலைமையில் நடத்தப்பட்ட உயர்மட்ட ராணுவ கூட்டத்தில், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "இந்தியாவின் எந்தவொரு தாக்குதலும் தைரியமாக எதிர்கொள்ளப்படும், அதற்கு வலிய பதிலடி கொடுக்கப்படும்," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.